இலங்கைக்கு வந்து பிச்சை எடுக்கும் வெளிநாட்டு ஜோடி
வெளிநாடு ஒன்றை சேர்ந்த கணவன் மனைவி, இலங்கைக்கு சுற்றுலா வீசா அனுமதியில் வருகை தந்து பிச்சை எடுத்து வருகின்றனர். வலது குறைந்த இவர்கள் கொழு...


வலது குறைந்த இவர்கள் கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் பிச்சை எடுத்து வருகின்றனர்.
தமது தாய் மொழியை தவிர வேறு மொழியை பேச தெரியாத இவர்கள், தாய் மொழியிலேயே பிச்சை கேட்டு வருகின்றனர்.
சக்கர நாற்காலியில் அமர்ந்து பிச்சை எடுக்கும் ஆண், சில நேரங்களில் பஸ்களுக்கு அருகில் சென்று பிச்சை எடுப்பதை காணமுடிகிறது. இவர்களை பார்த்தால் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றை சேர்ந்தவர்கள் போல் தெரிகிறது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.