மஹிந்த ராஜபக்ச மைத்ரிபாலவை சந்தித்துள்ளார், அவருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக போட்டியிடும் வாய்ப்பு வழங்பப்படவுள்ளது போன்ற தகவல்களால் அதிருப்தியடைந்து நேற்றைய தினம் ஊவா மாகாண முதல்வர் ஹரின் பெர்னான்டோ தனது ஆதங்கத்தை வெளியிட்டிருந்த நிலையில் மேலும் ஒரு இளைய அரசியல்வாதியான மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிக்காவும் இன்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மஹிந்தவுடன் கை கோர்ப்பதானது 62 லட்சம் மக்களுக்கு செய்யும் துரோகம் என வர்ணித்திருக்கும் அவர் மஹிந்த இருக்கும் கட்சியில் தம்மால் இணைந்து இயங்க முடியாது எனவும் எனினும் ஐக்கிய தேசியக் கட்சியிலன்றி வேறு கூட்டணி ஒன்றையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் மைத்ரி ஆதரவு சு.க அணியினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் மஹிந்தவுக்கு இடமளிக்கப்பட்டால் தான் அரசியலை விட்டு ஒதுங்கி விடுவேன் என ராஜித சேனாரத்னவும் முன்னதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.