வீடுகளை நிர்மாணிக்க சிறுநீரகங்களை விற்கும் நேபாள மக்கள்

நேபாளத்தை கடந்த ஏப்ரல் மாதம் தாக்கிய 7.8 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சியில் சிக்கி பல கிராமங்களிலுள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில...

நேபாளத்தை கடந்த ஏப்ரல் மாதம் தாக்கிய 7.8 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சியில் சிக்கி பல கிராமங்களிலுள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், மேற்படி பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தமக்கென புதிதாக வீடொன்றை நிர்மாணிக்கும் முகமாக தமது சிறுநீரகங்களை உடல் உடலுறுப்புகளை கடத்துபவர்களுக்கு விற்றுள்ளமை தொடர்பான அதிர்ச்சிச் தகவல் வெளியாகியுள்ளது.



இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேபாள காத்மண்டு நகருக்கு சுமார் 12 மைல் தொலைவிலுள்ள ஹொக்ஸ் என்ற கிராமத்தில் வாழ்பவர்களில் ஏறத்தாழ அனைவருமே தமது சிறுநீரகமொன்றை விற்பனை செய்தவர்கள் என்பதால் அந்தக் கிராமம் தற்போது 'சிறுநீரக கிராமம்' என அழைக்கப்படுகிறது.

இது தொடர்பில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளுக்குத் தாயான கீதா என அழைக்கப்படும் பெண் விபரிக்கையில், உடல் உறுப்புகளைக் கடத்துபவர்களுக்கு தரகர்களாக செயற்படுபவர்கள் நேபாளத்தில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்திற்கும் விஜயம் செய்து அங்குள்ள மக்களைத் தமது உடல் உறுப்புகளை விற்க ஊக்குவித்து வருவதாக கூறினார்.



இந்நிலையில் தனது சிறுநீரகத்தை விற்க தனது மைத்துனியால் தான் ஊக்குவிக்கப்பட்டதாக கூறிய கீதா (37 வயது), தனது சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்காக இந்தியாவுக்கு பயணம் செய்ததாக தெரிவித்தார்.

அவர் தனது சிறுநீரகத்தை 1,300 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான தொகைக்கு விற்பனை செய்துள்ளார்.

தொடர்ந்து அவர் சிறுநீரக விற்பனையால் கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி ஹொக்ஸ் கிராமத்தில் நிலமொன்றை வாங்கி சிறிய வீடொன்றை கட்டியுள்ளார்.

சிறுநீரகங்களை விற்கத் தூண்டும் தரகர்கள் சிறுநீரகங்களை வெட்டி அகற்றிய பின்னர் அந்த உறுப்பு மீளவும் வளரும் என பாமர மக்களில் பலரை நம்ப வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

நேபாள அரசாங்கம் சிறுநீரகங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டமொன்றை 2007 ஆம் ஆண்டில் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஹிலரி கிளிண்டன் தயார்

அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதியாக தெரிவாகும் இலக்குடன் அந்நாட்டின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளிண்டன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி...

65 வயதில் 4 குழந்தைகளை வயிற்றில் சுமக்கும் பெண்

65-வயதுடைய அன்ங்ரேட் ரவுனிங்க் பெர்லினில் உள்ள பாடசாலையில் ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழி பயிற்சி அளிக்கும் ஆசிரியராக உள்ளார். ரவுனிங்கிற்கு ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ளது 13 குழந்தைகளும் 5 வெவ்வேறு தந்த...

தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட அரண்மனை: கோலாகலமாய் அரங்கேறிய இளவரசரின் திருமணம் (வீடியோ இணைப்பு)

புருனேய்(Brunei) நாட்டு மன்னர் தனது மகனின் திருமணத்தை தங்கத்தால் இழைக்கப்பட்ட அரண்மனையில், ஆடம்பரமாக நடத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.உலக பணக்கார குடும்பங்களில் ஒன்றான புருனேய் நாட்டு மன்னர், த...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item