'எனது உடலை விற்க விரும்புகிறேன்' என்ற வாசக அட்டை கழுத்தில் தொங்க உள்ளாடையுடன் பவனி
தனது மனைவிக்கு பிறிதொரு நபருடன் காதல் தொடர்பு இருப்பதை அறிந்து சினமடைந்த கணவர் ஒருவர், மனைவியின் கழுத்தில் "நான் எனது உடலை விற்க விரும்...


ஜியாங்ஸி மாகாணத்திலுள்ள யுஷான் நகரைச் சேர்ந்த ஸாங் (37 வயது) என்ற கணவரே இரகசிய காதல் தொடர்பைப் பேணி தனக்குத் துரோகம் செய்த தனது மனைவி ஆங் நீக்கு(33 வயது) இவ்வாறு தண்டனை வழங்கியுள்ளார்.
தனது மனைவியின் காதல் தொடர்பு குறித்து அறிந்து சினமடைந்த ஸாங், சம்பவ தினம் அளவுக்கதிகமாக குடித்து விட்டு வந்து ஆங் நீயை அடித்து உதைத்துள்ளார்.
அதன் பின்பும் கோபம் தணியாத ஸாங் தனது மனைவியை உள்ளாடையுடன் வீதி வழியாக செல்ல கட்டாயப்படுத்தியுள்ளார்.மனைவி தனது கட்டளைக்கு அமைய வீதி வழியாக செல்வதை உறுதிப்படுத்த ஸாங் காரொன்றில் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனைவி வீதி வழியாக அவமானம் தாங்காது தலையைக் குனிந்தவாறு அழுத வண்ணம் உள்ளாடையுடன் நடந்து சென்றுள்ளார்.திருமணம் செய்து 10 ஆண்டுகளாக இணைந்து வாழும் ஸாங்கிற்கும் ஆங் நீயிற்கும் இரு மகள்மார் உள்ளனர்.
சொத்து அபிவிருத்தி கம்பனியொன்றை செயற்படுத்தி வரும் ஸாங், தனது தொழில் நிறுவனத்திலேயே நாளின் பெரும் பகுதியைக் கழித்து வந்ததாகவும் அவர் பிறிதொரு நகரில் மகள்மாருடன் வாழ்ந்த மனைவியுடன் சொற்ப நேரத்தையே செலவிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.அத்துடன் தனது மனைவி தனக்கு ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுத் தரவில்லை என அவர் கடும் அதிருப்தியடைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.