தெரு விளக்கில் அமர்ந்து படிக்கும் சிறுவன்: புகைப்படம் வெளியானதால் குவியும் உதவிகள்
பிலிப்பைன்ஸ் மாணவன் ஒருவன் தெருவிளக்கில் அமர்ந்து படிக்கும் புகைப்படம் முகநூலில் வெளியானதால் அவனுக்கு உதவிகள் குவிந்துள்ளன. பிலிப்பைன்ஸ் ந...


பிலிப்பைன்ஸ் மாணவன் ஒருவன் தெருவிளக்கில் அமர்ந்து படிக்கும் புகைப்படம் முகநூலில் வெளியானதால் அவனுக்கு உதவிகள் குவிந்துள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மாண்டேவ் நகரத்தை சேர்ந்த கிறிஸ்டினா எஸ்பினோசா(42) என்பவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இவரது கணவர் இறந்துவிட்டதால், 3 குழந்தைகளையும் மிகவும் சிரமப்பட்டு வளர்த்து வருகிறார்.
இவர் வேலை செய்யும் மளிகை கடைக்கு அருகில் மெக்டோனால்ட் கடை ஒன்று உள்ளது, அதன் வெளிப்புறத்தில் அலங்கார மின்விளக்குகள் எரியும்.
இவரது மகன்களில் ஒருவரான டேனியல்(9) பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பியவுடன், அந்த மின்விளக்குகளின் வெளிச்சத்தில் அமர்ந்து படிப்பார்.
கடையின் ஜன்னல் அருகில் ஒரு பெஞ்ச் இருக்கும், அதில் தனது நோட்டு புத்தகங்களை வைத்துக்கொண்டு அந்த ஜன்னல் வழியாகபடும் மங்கலான விளக்கு வெளிச்சத்தில் டேனியல் அமர்ந்து தனது வீட்டுப்பாடங்களை எழுதி முடிப்பதோடு மட்டுமல்லாமல், தனது பாடங்களையும் படிப்பான்.
இந்த காட்சியை அந்த வழியாக சென்ற கல்லூரி மாணவி ஜாய்ஸ் டொரீபிரான்கா என்பவர் புகைப்படம் எடுத்து தனது முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனை பார்த்த சமூகதள பயன்பட்டாளர்கள் டேனியலின் படிப்புக்கு உதவியுள்ளனர், பண உதவி, பள்ளி படிப்புக்கு தேவையான பொருட்கள் என டேனியலுக்கு உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.