ஜனநாயகத்தின் ஊடாக பெறப்பட்ட வெற்றியின் மூலம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது – மரிக்கார்
ஜனநாயகத்தின் ஊடாக பெறப்பட்ட வெற்றியின் மூலம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்த...


ஜனநாயகத்தின் ஊடாக பெறப்பட்ட வெற்றியின் மூலம் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
வெல்லம்பிட்டி – கித்தம்பவ்வ பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டு காரியாலத்தினை திறந்து வைத்ததன் பின்னர் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இந்த கருத்தினை தெரிவித்தார்.
மேலும் ஊழலோ வன்முறைகளோ இல்லாத நிலையில் கொலன்னவை இன்று காணப்படுவதாகவும், அனைத்து கட்சிகளும் கொலன்னவையில் அரசியல் செய்யக்கூடிய நிலை தோன்றியுள்ளதுதாகவும் தெரிவித்ததுடன் கிடைத்த ஜனநாயகத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி வாக்களித்து தொடர்ந்தும் அதனை உறுதிப் படுத்துவோம் எனவும் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.