ஓய்வூதியம் பெறுநர்களின் கொடுப்பனவு தொடர்பில் புதிய சுற்றறிக்கை
ஓய்வூதியம் பெறுநர்களின் கொடுப்பனவு தொடர்பான குளறுபடிகளை நிவர்த்திசெய்யும் புதிய சுற்றறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த சுற்றறிக்க...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_416.html
இந்த சுற்றறிக்கையில் நேற்று (25) மாலை தாம் கையொப்பமிட்டதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே. தடல்லகே குறிப்பிடுகின்றார்.
புதிய சுற்றறிக்கையின் விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
ஓய்வூதியம் பெறுநர்களின் கொடுப்பனவு தொடர்பான குளறுபடிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன் ஊடாக பல்வேறு குளறுபடிகளை எதிர்நோக்கியிருந்த சுமார் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ஓய்வூதியம் பெறுநர்கள் நன்மையடைந்துள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate