(படங்கள்) சீனாவில் பொலிஸார் முஸ்லிம்கள் மோதல். 15 முஸ்லிம்கள்,18 பொலிசார் பலி.
சீனாவின் ‘சின்ஜியாங் பிராந்தியத்தில் ரமழான் நோன்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக போக்குவரத்து சோதனைச் சாவடியில் ...
http://kandyskynews.blogspot.com/2015/06/15-18.html
சீனாவின் ‘சின்ஜியாங் பிராந்தியத்தில் ரமழான் நோன்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக போக்குவரத்து சோதனைச் சாவடியில் இருக்கும் பொலிஸாருக்கும் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட மோதலில் இதுவரை 33 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
தெற்கு நகரான கஷ்கரிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இங்கு பெரும்பான்மை ஹென் சீனர் களுக்கும் உய்குர் முஸ்லிம்களுக்கும் இடையில் அண்மைய ஆண்டுகளில் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரமழான் மாதத்தில் அரச ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நோன்பு நோற்க தடை விதித்த சீன அரசு உணவகங்களை திறந்து வைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் கடந்த திங்களன்று சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்டிருக் கும் தாக்குதலில் பல பொலிஸாரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு பதிலடியாக ஆயுதமேந்திய பொலிஸார் தீவிராவதிகள் என்ற குற்றச்சாட் டில் 15 பேரை கொன்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
‘சின்ஜியாங் பிராந்தியத்தில் இஸ்லாத்திற்கும் உய்குர் கலாசாரத்திற்கும் எதிராக அரசு மேற்கொள்ளும் கடுமையான கட்டுப்பாடுகளே அங்கு பதற்றம் தீவிரமடைய காரணம் என்று உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.







Sri Lanka Rupee Exchange Rate