அறிமுக போட்டியிலேயே "ஹாட்ரிக்" விக்கெட்: உலக சாதனை படைத்த தென் ஆப்பிரிக்க வீரர் (வீடியோ இணைப்பு)
தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்தில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்துக்கெதிராக மு...

டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி வங்கதேசத்துக்கெதிராக முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கியது.
இதில் 20 வயதான தென் ஆப்பிரிக்க வீரர் ககிசோ ரபடா ஒருநாள் போட்டியில் பந்து வீச்சாளராக அறிமுகமானார். இவர் இதற்கு முன்பு 4 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இப்போட்டியில் ரபடாவின் பந்து வீச்சில் வங்கதேச அணி சுருண்டது.
8 ஓவர்களில் 16 ஓட்டங்களுக்கு "ஹாட்ரிக்" விக்கெட்டுடன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.
அறிமுக போட்டியில் அதிக விக்கெட்டுகள் சாய்த்த வீரர் என்ற சாதனை படைத்ததுடன் "ஹாட்ரிக்" வீழ்த்திய இரண்டாவது நபர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதற்கு முன்பு வங்கதேச வீரர் தைஜுல் இஸ்லாம், தனது முதல் ஆட்டத்தில் "ஹாட்ரிக்" விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.