UN – HR ஆணையாளர் இலங்கைக்கு எச்சரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹசெய்ன் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் கடந்த கால தவறுகளை...
http://kandyskynews.blogspot.com/2015/03/un-hr.html
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹசெய்ன் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசாங்கம் கடந்த கால தவறுகளை மீளவும் செய்யக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 28ம் அமர்வுகளில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்படும் போது மக்களின் கருத்து குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களும் உள்ளீடுகளும் மிகவும் முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட தவறுகள் மீளவும் இடம்பெறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இலங்கை தொடர்பிலான விசாரணை அறிக்கை இந்த அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டியது என்ற போதிலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரையில் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதனை ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் ஒத்துழைப்பு வழங்க விரும்பும் முறைமை ஆகியனவற்றின் அடிப்படையிலேயே அறிக்கை சமர்ப்பித்தல் கால தாமதப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate