உலக கோப்பை கிரிக்கெட்; ஸ்காட்லாந்து அணி 142 ரன்னில் சுருண்டது, நியூசிலாந்து வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி...


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள நியூசிலாந்து-ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 98 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்படும் நியூசிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு, பீல்டிங்கில் நல்ல நிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் பெரும் பலத்துடன் உள்ள நியூசிலாந்து அணியிடம் ஸ்காட்லாந்து அணியால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 142 ரன்களில் சுருண்டது. நியூசிலாந்து அணியின் அதிரடி பந்துவீச்சுக்கு ஸ்காட்லாந்து வீரர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஸ்காட்லாந்து 36.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 142 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து பேட்டிங் செய்து விளையாடியது. நியூசிலாந்து 24.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் எடுத்து, 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஸ்காட்லாந்து அணியின் பந்துவீச்சும் சற்று சிறப்பாகவே இருந்தது. அணியில் வில்லியம்சன் மட்டும் அதிகப்பட்சமாக 38 ரன்கள் எடுத்தார்

Related

விளையாட்டு 1210351449475728583

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item