இந்தியா அபார வெற்றி
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4வது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடந்தது. இதில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டு விள...


இதில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாயது. முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 107 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து ரெய்னா 74 ரன்களும், தவான் 73 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் சோயல் கான் அதிகபட்சமாக 5 விக்கெட் எடுத்தார்.
301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்களே அடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மிஸ்பா உல் ஹக் 76 ரன்களும். அகமத் ஷெசாத் 47 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.