உலகப்கோப்பை கிரிக்கெட் போட்டி: தென் ஆப்ரிக்கா அபார வெற்றி

ஹாமில்டன் : டேவிட் மில்லர், டுமினி சதம் விளாச, ஜிம்பாப்வேக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி, 62 ரன்கள் வித்தியாசத்...



ஹாமில்டன் : டேவிட் மில்லர், டுமினி சதம் விளாச, ஜிம்பாப்வேக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி, 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில், 11வது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் இன்று நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியில், பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்க அணி, ஜிம்பாப்வே அணியை சந்தித்தது. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே கேப்டன் சிகும்புரா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
அதிர்ச்சி துவக்கம்:
தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கமே அதிர்ச்சி தான். ஜிம்பாப்வே பவுலர்களை சமாளிக்க முடியாமல், துவக்க வீரர்கள் குயின்டன் டி காக், ஆம்லா ரன்கள் சேர்க்கத் திணறினர் . இந்த நெருக்கடியில் குயின்டன் டி காக் (7) முதலில் கிளம்பினார். அடுத்த சில நிமிடத்தில் பயங்கராவின் வேகத்தில் ஆம்லா (11) போல்டானார். டுபிளசி (24) நீடிக்கவில்லை. கேப்டன் டிவிலியர்ஸ் (25), எர்வினின் அசத்தலான 'கேட்ச்சில்' திரும்பினர்.
'சூப்பர்' ஜோடி:
பின் இணைந்த மில்லர், டுமினி ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய மில்லர், போகப் போக அதிரடிக்கு மாறினார். மியர் வீசிய போட்டியின் 48வது ஓவரில், 3 சிக்சர், 3 பவுண்டரி விளாசிய மில்லர், 30 ரன்கள் எடுக்க, உலக கோப்பை தொடரின் அறிமுக போட்டியில், 81வது பந்தில் சதம் கடந்து அசத்தினார்.இவருக்கு 'கம்பெனி' கொடுத்த டுமினி, தன் பங்கிற்கு சதம் விளாசினார். இந்த ஜோடியை பிரிக்க, சிகும்புரா எடுத்த எந்த முயற்சியும் கடைசி வரை பலிக்கவே இல்லை.
தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 339 ரன்கள் குவித்தது. சதம் அடித்த மில்லர் (138 ரன், 92 பந்து), டுமினி (115 ரன், 100 பந்து) அவுட்டாகாமல் இருந்தனர்.
மசகட்சா ஆறுதல்:
கடின இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணிக்கு சிக்கந்தர் (5) சோபிக்கவில்லை. பின் இணைந்த சிபாபா, மசகட்சா ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தது. இருப்பினும், அரைசதம் கடந்த சிபாபா (64), மசகட்சா (80) அவுட்டான பின், பிரண்டன் டெய்லர் (40), வில்லியம்ஸ் (8), எர்வின் (13) என, ஒருவரும் நிலைக்கவில்லை. பின் வரிசையில் மையர் மட்டும் 27 ரன்கள் எடுக்க, ஜிம்பாப்வே அணி 48.2 ஓவரில் 277 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. மில்லர் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.





Related

மண்ணை கவ்விய அர்ஜென்டினா: முதன் முறையாக பட்டம் வென்று வரலாறு படைத்த சிலி

கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் சிலி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி முதன் முறையாக பட்டம் வென்றது. 99 ஆண்டுகால கோபா அமெரிக்க கால்பந்து வரலாற்றில் சிலி அணி ஒரு முறை கூட பட்டம் வெ...

நடால் அதிர்ச்சி தோல்வி: விம்பிள்டன் போட்டியில் இருந்து வெளியேற்றம்

பிரித்தானியாவில் நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பிரித்தானியாவின் லண்டனில் விம்பிள்டன் மென்பந்தாட்ட தொடர் நடைபெற்று வருக...

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டியொன்றில் உலகின் முன்னிலை டென்னிஸ் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றுள்ளார். ரஷ்யாவின் கெஸ்பரேனுடன் நடைபெற்ற போட்டியில் 2-0 என்ற ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item