உலக கோப்பை போட்டியில் சச்சினின் சாதனையை முறியடித்த கோலி
உலக கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. இதில் இந்திய அணி வீரர் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதம...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_236.html
உலக கோப்பை போட்டிகளில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதியது. இதில் இந்திய அணி வீரர் விராட் கோலி அதிரடியாக விளையாடி சதமடித்தார். இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றார்.இதற்கு முன் 2003 ஆண்டு உலக கோப்பை போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக 98 ரன்கள் எடுத்திருந்தார் சச்சின். இது தான் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் சதம் அடித்த கோலி சச்சினின் சாதனையை முறியடித்தார். அதே போல் இன்றைய போட்டியில் சதமடித்ததன் மூலம், ஒரு நாள் போட்டிகளில் 22 சதம் அடித்த கங்குலியின் சாதனையையும் சமன் செய்தார் கோலி.
தற்போது தெண்டுல்கருக்கு அடுத்தபடியாக அதிக சதங்கள் குவித்தவர் வரிசையில் கோலி இடம்பிடித்துள்ளார். தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சச்சின் 49 சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate