உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அசத்தல் வெற்றி: வெஸ்ட் இண்டீஸ் அதிர்ச்சி
உலக கோப்பை போட்டியின் 5வது லீக் ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள நெல்சன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ம...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_165.html
உலக கோப்பை போட்டியின் 5வது லீக் ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள நெல்சன் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.
தொடக்க வீரர்களாக கெய்ல் மற்றும் ஸ்மித் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருப்பினும் அவர்களால் நீடித்து விளையாட முடியவில்லை. கெய்ல் 36 ரன்களிலும் ஸ்மித் 18 ரன்களிலும் அவுட் ஆனார்கள். பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்களும் அயர்லாந்து அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
87 ரன்களில் அந்த அணி 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிம்மன்ஸ் மற்றும் சமி ஆட்டத்தின் போக்கை மனதில் வைத்து சிறப்பாக விளையாடினார்கள். இவர்களது ஜோடி 154 ரன்களை குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்த பெரிதும் உதவியது. 9 பவுண்டரி, 4 சிக்சர் உடன் சமி 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி நிமிடங்களில் அதிரடியாக விளையாடி சதம் அடித்த சிம்மன்ஸ் 102 ரன்களில் ஆட்டமிழந்ததார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 304 ரன்கள் குவித்தது.
இதனைத் தொடர்ந்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு துவக்க ஜோடியான கேப்டன் போர்ட்டர்பீல்ட், ஸ்டிர்லிங் இருவரும் நிதானமாக விளையாடினர். இந்த ஜோடி 71 ரன்கள் சேர்த்த நிலையில் போர்ட்டர்பீல்ட் (23) ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஸ்டிர்லிங்குடன் ஜாய்ஸ் இணைய ஆட்டம் விறுவிறுப்படைந்தது.
இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். சதத்தை நெருங்கிய பால் ஸ்டிர்லிங் 92 ரன்னில் துரதிர்ஷ்டவசமாக விக்கெட்டை இழந்தார். இதேபோல் ஜாய்ஸ் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் பால்பிரின்(9), வில்சன் (1), கெவின் ஓ‘பிரையன் (0) ஆகியோர் விரைவில் பெவிலியன் திரும்பியபோதும், நீல் ஓ‘பிரையன் (79 நாட் அவுட்) பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால், 25 பந்துகள் மீதமிருந்த நிலையில் அயர்லாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. பால் ஸ்டிர்லிங் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate