பெருமிதம் கொண்ட அப்பாவிற்கு 17ம் திகதி எஞ்சிய பாடத்தையும் மக்கள் புகட்டுவார்கள்!- தலதா அதுகோரல
பெருமிதம் கொண்ட அப்பாவிற்கு (அப்பச்சி) எதிர்வரும் 17ம் திகதி எஞ்சிய பாடத்தையும் மக்கள் புகட்டுவார்கள் என அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்...


பெருமிதம் கொண்ட அப்பாவிற்கு (அப்பச்சி) எதிர்வரும் 17ம் திகதி எஞ்சிய பாடத்தையும் மக்கள் புகட்டுவார்கள் என அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் பாவனைக்காக 1500 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
அலரி மாளிகையில் மாதமொன்றுக்கான நீர்க் கட்டணம் 13 லட்ச ரூபாவாகும். அங்கு வாழும் நாய்களுக்கும் ஏ.சீ அறைகள் கொண்ட கூடுகள்.
மகன்மார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களின் பயணங்களுக்காக ஹெலிகொப்டர்கள். இதற்காகவா ஆசியாவின் ஆச்சரியம் என்று குறிப்பிடப்படுகின்றது?
அப்பாவி ஏழை மக்களின் பால் மா பக்கற் ஒன்றிற்கு 150 ரூபா வரி செலுத்தப்பட்டது.
பெற்றோல் டீசலின் விலை உலகச் சந்தையில் எவ்வளவு குறைந்தாலும் இலங்கையில் குறைக்கப்படவில்லை.
போரிற்கான குடும்பத்தில் ஒருவர் என அறிவிக்கப்பட்டது. இரண்டாவது மகன் கடற்படைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவருக்கு இராணுவத் தளபதிக்கும் அதிகமான சலுகைகள் வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதுவா ஆசியாவின் ஆச்சரியம்?
இது குறித்து அவதானமாக கவனித்துக் கொண்டிருந்த மக்கள் கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி மஹிந்த ராஜபக்சவிற்கு தகுந்த பாடத்தை புகட்டினார்கள்.
இந்த பெருமிதம் கொண்ட அப்பாவிற்கு (அப்பச்சிக்கு) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி எஞ்சிய பாடத்தையும் மக்கள் புகட்டுவார்கள் என பலங்கொடவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.