சவுதியில் அதிகரித்து வரும் மரண தண்டனை நிறைவேற்றம்
நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரருக்கும் , தனது நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் தலையை வெட்டி நேற்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெ...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_907.html
நாட்டைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரருக்கும் , தனது நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் தலையை வெட்டி நேற்று மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இவ்வருடத்தில் அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வருட எண்ணிக்கையான 90 ஐ மிஞ்சியுள்ளது.
சிரியாவைச் சேர்ந்த இஸ்மாஹெல் அல்-தவ்ம் என்ற நபர் தடைசெய்யப்பட்ட எம்பெடமைன் வில்லைகளை கடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்று தலைவெட்டி கொலைசெய்யப்பட்டார்.
சவுதியில் மரண தண்டனை அதிகளவில் நிறைவேற்றப்படுகின்றமைக்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம் வெளியிட்டுள்ளது.
கடந்த 1995 ஆம் ஆண்டில் அந்நாட்டில் 192 பேருக்கு தலைவெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுவே அந்நாட்டில் வருடமொன்றில் நிறைவேற்றப்பட்ட அதிகப்படியான மரண தண்டனை எண்ணிக்கையாகவுள்ளது.
எனினும் இவ்வருடத்தில் இத்தொகையை சவுதி அரேபியா முந்தக்கூடிய வாய்ப்பிருப்பதாக கருதப்படுகின்றது.
சவுதியின் நீதித்துறையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
அங்கு குற்றஞ்சாட்டப்படுபவர்களுக்கு தம்பக்க நியாயத்தை தெளிவுபடுத்த ஒழுங்காக வாய்ப்பு வழங்கப்படுவதில்லையென நீண்டநாட்களாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சவுதியின் நீதித் துறையின் செயற்பாடுகள் மீது கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதுதவிர சவுதி அரேபியாவில் கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுதல், ஒன்று கூடுதலுக்கான உரிமை மறுக்கப்படுதல், விமர்சகர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீதான கெடுபிடிகள் போன்றவற்றுக்கும் பல அமைப்புகள் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.