நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்துக்கு வருகிற ஜுலை 15-ந் திகதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகி...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_474.html
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்துக்கு வருகிற ஜுலை 15-ந் திகதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு சரத்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது அணி சார்பில் பொதுச்செயலாளராக உள்ள ராதாரவி, துணைத்தலைவர் கே.என்.காளை ஆகியோரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், விஷால், நாசர் அடங்கிய மற்றொரு அணியும் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறது. எனினும் தேர்தல் நடிக்கவிருப்பதாக அறிவித்துள்ள ஜூலை 15-ந் திகதியான புதன்கிழமை வேலை நாள் என்பதால், இந்த தேர்தல் திகதியை ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றவேண்டும்.
அதேபோல், நடிகர் சங்க தேர்தலை ஓய்வு பெற்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடத்தவேண்டும் என்று இரு கோரிக்கைகளை வலியுறுத்தி நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனால், குறிப்பிட்ட திகதியில் நடிகர் தென்னிந்திய நடிகர்கள் சங்க தேர்தல் நடக்குமா? என்ற சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில் நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து இன்னும் 2 வாரத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.