இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு அமெரிக்கா பாராட்டு
இலங்கையில் மீண்டும் ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்தியதற்காகவும், ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்காகவும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தனது பாராட...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_634.html

இலங்கையில் மீண்டும் ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்தியதற்காகவும், ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்காகவும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தனது பாராட்டை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 29 அமர்வு நேற்று ஆரம்பமாகியது. அந்த அமர்வில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலயே அமெரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அதன் பாதையில் தொடர்ந்தும் பயணிக்குமாறும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தினால் ஆகஸ்டில் வெளியிடப்படவுள்ள அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. செப்டம்பரில் அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்படி சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே அது ஆகஸ்டில் தூதரகங்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate