20ஆம் திருத்தச் சட்டம் நிறைவேறினாலும் 5 வருடங்களின் பின்பே அமுலாகும்!
புதிய தேர்தல் முறை நிறைவேற்றப்பட்டாலும் அது ஐந்து வருடத்திற்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெ...
http://kandyskynews.blogspot.com/2015/06/20-5.html
புதிய தேர்தல் முறை நிறைவேற்றப்பட்டாலும் அது ஐந்து வருடத்திற்குப் பின்னரே நடைமுறைக்கு வரும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
சிறுபான்மைக் கட்சிகளுக்கும் நன்மையளிப்பதாகவே புதிய தேர்தல் முறை அமைய வேண்டும் என குறிப்பிட்ட பிரதியமைச்சர், அவசர அவசரமாக அன்றி ஐந்து வருடங்களின் பின்னரே அது நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல்முறை மட்டுமன்றி நிறைவேற்று ஜனாதிபதி முறைமையும் முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டியுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.