போட்டியிடாத, தேசியப் பட்டியலில் பெயரிடப்படாத எவருக்கும் நாடாளுமன்ற உறுப்புரிமை கிடையாது!– மஹிந்த தேசப்பிரிய

தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேசியப் பட்டியலில் பெயரிடப்படாதவர்கள் எவரும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என தேர்தல் ஆ...


தேர்தலில் போட்டியிடாத மற்றும் தேசியப் பட்டியலில் பெயரிடப்படாதவர்கள் எவரும் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேசியப் பட்டியலில் அந்தந்த கட்சிகளினால் பெயரிட்டு வெளியிடப்பட்டுள்ள உறுப்பினர்களைத் தவிர்ந்த வேறு எவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேசியப் பட்டியல் ஊடாக பதவி வகிக்க இம்முறை அனுமதிக்கப்படாது.
தேர்தல் சட்டத்திற்கு அமைய இந்த விடயம் குறித்த சட்டங்கள் இம்முறை கடுமையாக அமுல்படுத்தப்படும்.

தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்படாத மற்றும் தேர்தலில் போட்டியிடாத சிலர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தெரிவு செய்யப்படுவதனால், தேர்தல் ஆணையாளர் என்ற ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
எனவே இம்மறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் போது தேர்தல் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Related

மே 2ம் திகதி இலங்கைக்கு வருகிறார் ஜோன் கெரி?

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி, மே மாதம் 2ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 30 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்க இராஜாங்கச் செயலர் இலங்கைக்கு விஜயம் செ...

மலேசியாவில் புலிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லையாம் புதிய அரசு! - சாடுகிறது திவயின

படையினரால் தேடப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள், போதைப்பொருள் வர்த்தகர்கள் உள்ளிட்ட 40 பேர் மலேசியாவில் பதுங்கி வாழ்கின்றனர்.எனினும் இவர்களை கைது செய்ய மலேசியாவிற்கான இலங்...

பசில் நாளை நாடு திரும்புவார்?

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவர் எதிர்வரும் 21ம் திகதியளவில் இலங்கைக்கு வருகை தருவார் என்று அவரின் சட்...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item