எனக்கு கணக்குகள் இல்லை! மஹிந்த
தனதும் தனது குடும்பத்தினரதும் பெயர்களில் வெளிநாட்டு வங்கிகளில் இரகசிய மற்றும் சட்டவிரோத கணக்குகள் இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_492.html

தனதும் தனது குடும்பத்தினரதும் பெயர்களில் வெளிநாட்டு வங்கிகளில் இரகசிய மற்றும் சட்டவிரோத கணக்குகள் இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
இது குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
‘தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களால் எனக்கும் என் மனைவிக்கும் மகன்களுக்கும் வெளிநாட்டு வங்கிகளில் பில்லியன் டொலர் பெறுமதியான இரகசிய மற்றும் சட்டவிரோத கணக்குகள் இருப்பதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன.
குறித்த வதந்திகள், ஊடகங்கள் மூலம் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என் அரசியல் எதிரிகள் மூலம் கருவியாக பயன்படுத்தப்படுவதாக தோன்றுகிறது.
எனவே, வெளிநாட்டு வங்கிகளில் நானோ எனது மனைவியோ அல்லது பிள்ளைகளோ எந்தவொரு சட்டவிரோத அல்லது இரகசியக் கணக்குகளையும் வைத்திருக்கவில்லை என்பதை மக்களுக்கு கூற விரும்புகிறேன்’ என அவர் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate