தமிழர்கள் - சிங்களவர்களுக்கிடையில் நம்பிக்கையீனம் தொடர்கிறது
இலங்கைத் தீவில் தமிழ் - சிங்கள இன சமூகங்களுக்கு இடையில் தொடர்ந்தும் நம்பிக்கையீனம் நீடித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_94.html

இலங்கைத் தீவில் தமிழ் - சிங்கள இன சமூகங்களுக்கு இடையில் தொடர்ந்தும் நம்பிக்கையீனம் நீடித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அனைத்து தலைவர்களும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின், விசேட அரசியல் பிரதிநிதி ஜிப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார்.
அனைத்து இன சமூகங்களையும் இணைத்துக் கொள்ளும் வகையிலான ஓர் நல்லிணக்க முனைப்பு மிகவும் அவசியமானது.
சிறிலங்கா அரசாங்கத்தின் வேண்டு கோளுக்கு அமைய குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பிலான உதவிகளை வழங்கத் தயார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே முதலாவது நடவடிக்கையாக இருக்க வேண்டும்.
புதிய அரசாங்கம் மக்கள் எதிர்நோக்கி வரும் அவசர பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்தில் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காணிப் பிரச்சினை, கைது செய்து தடுத்து வைத்தல்கள், காணாமல் போதல்கள், பொது மக்கள் காணிகளில் இராணுவத்தினர் நிலை கொண்டிருத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு முதலில் அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது.
நம்பகமானதும் சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாகவும் இந்த உள்ளக விசாரணைப் பொறிமுறைமை அமைய வேண்டும். இந்தப் பணிகள் மிகவும் சுலபமானதல்ல என்ற போதிலும், இவை இன்றியமையாதவை என அவர் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate