உருகுவேயின் ‘ஏழை ஜனாதிபதி’ ஓய்வு பெற்றார்
உலகின் மிகவும் ஏழை ஜனாதிபதியான ஜோஸ் முஜிகா (77) உருகுவே நாட்டு ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். மிகவும் எளிமையான, அனைவருடனும் இ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_73.html

மிகவும் எளிமையான, அனைவருடனும் இயல்பாக பழகக்கூடிய முஜிகா, தன்னுடைய ஐந்தாண்டு பதவிக்காலத்தில், உருகுவே நாட்டை பொருளாதார வளர்ச்சியடைய செய்து, சொந்த வாழ்வில் மிகவும் ஏழையானார்.
அதிபர் பதவிக்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டபோதும், அவற்றை ஏற்க மறுத்து, ஜனாதிபதி மாளிகையில் வசிக்காமல், இரண்டு அறைகள் கொண்ட, தன் வீட்டில் மனைவி மற்றும் வளர்ப்பு நாயுடன் வசித்து வந்தார்.
பாதுகாப்பிற்காக இரண்டு பொலிஸார் மட்டும் இருந்தனர். மாத சம்பளமாக வழங்கப்பட்ட, 13,300 டொலரில், 12 ஆயிரம் டொலரை ஏழை மக்களுக்கும், மீதமுள்ள 1,300 டொலரில், 775 டொலரை சிறுதொழில் செய்வோருக்கும் வழங்கி வந்தார்.
தன்னுடைய வேலைகளை தானே செய்துகொள்ளும் முஜிகா, குடும்ப செலவிற்காக, மனைவியுடன் இணைந்து மலர் சாகுபடி செய்தார்.
அலுவலகத்திற்கு செல்லும்போது மட்டும் அதிபருக்கான உடையை அணிந்து, தன்னுடைய காரை தானே ஓட்டிச் செல்வார். மற்ற நேரங்களில் சாதாரண உடையில் காணப்படுவார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) அதிபர் பதவியில் இருந்து முஜிகா ஓய்வு பெற்றதையடுத்து, ஆளும் பிராட் கட்சியை சேர்ந்த, தபாரே வாஜக்வேஜ் ( 75) அதிபர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார்.


Sri Lanka Rupee Exchange Rate