நடுவானில் நேருக்கு நேர் மோதிய விமானங்கள்: இரண்டு பேர் பரிதாப பலி
கனடாவில் நடு வானில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர். கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Fort McMurray ப...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_392.html

கனடாவின் அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள Fort McMurray பகுதியில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவில் இருவிமானங்கள் நடு வானில் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் இருவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை ஆர்சிஎம்பி அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்தின் போது ஒரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அதில் தனியாக பயணம் செய்தவிமானிக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து மற்ற விமானத்தை மருத்துவ ஹெலிகொப்டர் மூலம் தேடுதல் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் கிழக்கு Fort McMurray யில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த விமானத்தில் இருந்த இருவரும் இறந்துவிட்டதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.


Sri Lanka Rupee Exchange Rate