தவான், டோனி விளாசல்: இந்திய அணி 317 ஓட்டங்கள் குவிப்பு
வங்கதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 317 ஓட்டங்கள் குவித்துள்ளது. இந்திய அண...

http://kandyskynews.blogspot.com/2015/06/317.html

இந்திய அணி ஏற்கனவே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்திடம் பறிகொடுத்துவிட்டது.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி பந்துவீச முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ரோஹித் சர்மா களமிறங்கினர்.
ரோஹித் சர்மா (29) ரஹ்மான் பந்தில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கோஹ்லி (25) சாகிப்- அல்-ஹசன் பந்தில் பவுல்ட் ஆனார்.
நிதானமாக விளையாடிய தவான் (75) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் டோனி, ராயுடு இந்திய அணிக்கு வலுவான நிலையை அமைத்து கொடுத்தனர்.
ராயுடு 44 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். டோனி அரைசதம் (69) கடந்து வெளியேறினார்.
அடுத்த வந்த ரெய்னா தன் பங்கிற்கு அதிரடி காட்டினார். 21 பந்தில் 38 ஓட்டங்கள் குவித்தார்.
50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 317 ஓட்டங்களை குவித்தது. பின்னி (17), அக்சர் படேல் (10) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
318 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி விளையாடி வருகிறது.


