திருமலை வதைமுகாம் ஆதாரம் அம்பலம்! கடற்படைத் தளபதி சிக்கினார்!

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் கடற்படையைச் ச...

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தெகிவளையில ஐந்து மாணவர்கள் கடத்தப்பட்டு காணாமல்போன சம்பவத்துடன் கடற்படையைச் சேர்ந்தவர்கள் தொடர்புபட்டுள்ளனர்.
கடற்படையைச் சேர்ந்த லுதினன் கமாண்டர்களான ரணசிங்க சுமித் ரணசிங்க, ஹெட்டிஆராச்சி பிரசாத், சம்பத் முனசிங்க ஆகியோர் மூவருக்கும் எதிராக சான்று உள்ளதெனவும் இந்தக் கடத்தலில் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிசாந்த டி சில்வா சாட்சியமளித்தார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு விசாரணையில் புலனாய்வுப் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியான நிசாந்த டி சில்வா சாட்சியத்தை சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா நெறிப்படுத்துகையில்,

சாட்சி மேலும் தனது சாட்சியத்தில் கடற்படையை சேர்ந்த லுதினன் கமாண்டர்களான ரணசிங்க சுமித் ரணசிங்க, ஹெட்டிஆராச்சி பிரசாத், சம்பத் முனசிங்க ஆகிய மூவரும் கொழும்பு தெகிவளை, செட்டித்தெரு, வத்தளை ஆகிய இடங்களில் வைத்து 11பேரைக் கடத்தியதாகவும் அவர்களில் தெகிவளையில் கடத்தப்பட்ட ஜந்து மாணவர்களும் உள்ளடங்குவதாக சாட்சியமளித்தார்.

மேலும் தனது சாட்சியத்தில் கடத்தியவர்கள் இவ்வாறு கடத்திக் கொண்டுவந்து முதலில் சைத்திய வீதியிலும் பின்னர் திருகோணமலை கடற்படை சித்திரவதை முகாமில் அடைத்து வைத்ததன் பின் மாணவர்களை விடுதலை செய்வதற்கு கப்பமாக ஒவ்வொருவரிடமும் ஒரு கோடி ருபா கப்பம் கோரியுள்ளதாகவும் சான்று காணப்படுவதாக சாட்சியம் அளித்ததார்.

இதன்போது சாட்சியத்தை நெறிப்படுத்திய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா, சாட்சியிடம் மூன்று கடற்படை அதிகாரிகளும் மாணவர்களை கடத்திவந்து சித்திரவதை முகாமில் தடுத்த வைத்து கப்பம் கோரியமையை கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு தெரியுமா என வினவியபோது சாட்சி தனது சாட்சியத்தில்,

கடற்படைப் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமையை முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவும், முன்னாள் கடற்படை பேச்சாளர் திசாநாயகாவும் நன்கு அறிந்திருந்ததாகவும் தனது சாட்சியத்தில் தெரிவித்ததுடன் தளபதி வசந்த கரன்னாகொட நினைந்திருந்தால் இந்த மாணவர்களை விடுதலை செய்திருக்கலாம் எனவும் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.

42 சாட்சியங்களை விசாரணைக்கு உட்படுத்தியதுடன் சைத்திய வீதியிலுள்ள தடுப்பு முகாமையும் திருகோணமலையில் அமைந்துள்ள கடற்படை சித்திரவதை முகாமையும் விசாரணைக்குழு சென்று பார்வையிட்டு விசாரணை நடாத்தியதில் வெளிவந்த சான்றுகளின் அடிப்படையிலேயே சாட்சியம் அளிப்பதாக சாட்சி நீதிமன்றில் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை ஜிலை மாதம் 14ம் திகதிக்கு பிரதான நீதிமன்ற நீதிபதி கியான் பிலபிடிய ஒத்திவைத்தார்.

மனுதாரர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணிகளான கே.வி தவராசாவும் ஜே.சி வலியமுனவும் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

நாடாளுமன்றில் ஏற்பட்டுள்ள கலகம்

நாடாளுமன்றை உடனடியாக கலைக்குமாறு உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் கையொப்பத்துடன் பிரேரணையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க அரச கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள...

நாடாளுமன்றத்தில் தனித்து இயங்க போகும் ஜே.வி.பி!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது போல் நாடாளுமன்றத்திலும் தனித்து இயங்க போவதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி...

திஸ்ஸ அத்தநாயக்கவை ஆஜராகுமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அழைப்பு

வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு, இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அமைச்சு பதவியை பெற்றுக...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item