சீனாவை தாக்கிய கடும்புயலால் 100 பேர் பலி: தரைமட்டமான 54 ஆயிரம் வீடுகள்

சீனாவை நேற்று கடுமையான புயல் தாக்கியதில் சுமார் 104 பேர் பலியாகியுள்ளதாகவும், 54 ஆயிரம் வீடுகள் உருக்குலைந்து போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள்...

china_typhoon_002
சீனாவை நேற்று கடுமையான புயல் தாக்கியதில் சுமார் 104 பேர் பலியாகியுள்ளதாகவும், 54 ஆயிரம் வீடுகள் உருக்குலைந்து போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் உள்ள Jinxiang மாகாணத்தில் சூறாவளி காற்று தாக்கும் என அந்நாட்டு வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை உள்ளூர் நேரப்படி 5.25 மணியளவில் Saomai என பெயரிடப்பட்ட புயல் மணிக்கு சுமார் 216 கி.மீ வேகத்தில் கடுமையாக தாக்க தொடங்கியது.
புயல் காற்றுடன் தொடர்ந்து 15 மணி நேரங்கள் பலத்த மழை பெய்ய ஆரம்பித்ததால், மாகாணம் முழுவதும் பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தியது.
Cangnan நகரில் உள்ள ஒரு கான்கிரீட் கட்டடம் இடிந்து விழுந்ததில், சுமார் 41 பேர் பலியாகினர். சீன அரசாங்கத்திற்கு சொந்தமான Xinhua என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், கடும்புயலில் சிக்கி இதுவரை சுமார் 104 பேர் மரணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

புயலில் சிக்கிய சுமார் 190 நபர்கள் காணாமல் போயுள்ளதால், அவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
மேலும், மாகாணம் முழுவதும் புயல் ஏற்படுத்திய பாதிப்பில் சுமார் 54 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடற்கரை ஓரமாக குடியுள்ள சுமார் 1.6 மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு Saomai புயல் மிக பயங்கரமான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இயற்கை சீற்றங்களினால் இந்தாண்டு மட்டும் சுமார் 1699 பேர் பலியாகியுள்ளதாகவும், 415 பேரை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என சீனாவின் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

Related

நீண்ட இடைவெளிக்கு பிறகு சல்மான் ருஷ்டியின் புதிய நாவல் செப்டம்பரில் வெளியாகிறது

லண்டன்: இங்கிலாந்தில் வசித்து வரும் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார். வரலாறு,  மாயாஜாலம், காதல் உட்பட பல்வேறு சுவைகளுடன் கூடிய அந்த ப...

ஐ.எஸ். இயக்கத்தின் ரசாயன ஆயுத நிபுணர் பலி; ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள்வான்தாக்குதல்

வாஷிங்டன், ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ரசாயன ஆயுத நிபுணர் கொல்லப்பட்டார். ரசாயன ஆயுத நிபுணர் ஈராக் நாட்டில் சதாம் உசேன் அதிபராக இருந்தபோது,...

எல்லாரையும் தூக்குங்க: சவுதி மன்னரின்….

சவுதியின் புதிய மன்னராக பதவியேற்றுள்ள சல்மான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். கடந்த 23ம் திகதி சவுதியின் முன்னாள் மன்னர் அப்துல்லா காலமானதையடுத்து, அவரது சகோதரன் ச...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item