எல்லாரையும் தூக்குங்க: சவுதி மன்னரின்….
சவுதியின் புதிய மன்னராக பதவியேற்றுள்ள சல்மான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். கடந்த 23ம் திகதி சவுதியி...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_554.html
சவுதியின் புதிய மன்னராக பதவியேற்றுள்ள சல்மான் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.
கடந்த 23ம் திகதி சவுதியின் முன்னாள் மன்னர் அப்துல்லா காலமானதையடுத்து, அவரது சகோதரன் சல்மான், மன்னர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை செய்துள்ள சல்மான், பல்வேறு உயர் அதிகாரிகளையும் பணியிடமாற்றம் செய்துள்ளார்.
இதை தொடர்ந்து அந்நாட்டு உளவுத்துறை தலைவரை மாற்றி, புதிய உளவுத்துறை தலைவராக ஜெனரல் காலித் பின் அலி பின் அப்துல்லா ( Khalid bin Ali bin Abdullah)என்பவரை மன்னர் நியமித்துள்ளார்.
மேலும் முன்னாள் மன்னர் அப்துல்லாவின் நெருங்கிய உறவினரான இளவரசர் பந்தர் பின் சுல்தானிடமிருந்த (Bin Sultan) மன்னருக்கான ஆலோசகர் மற்றும், தேசிய பாதுகாப்பு செயலாளர் ஆகிய பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளை வைத்து பார்க்கும்போது அப்துல்லா ஆதரவாளர்களிடமிருந்து முழு அதிகாரத்தையும் தானே பறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசரம் தற்போதைய மன்னர் சல்மானுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.


Sri Lanka Rupee Exchange Rate