பிரித்தானிய இளவரசியின் வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்கிறாரா மகாராணி? அம்பலமாகும் ரகசியங்கள்
பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் அடிக்கடி வெளிநாட்டு பயணங்களில் ஈடுபடுவது மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்...


பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் அடிக்கடி வெளிநாட்டு பயணங்களில் ஈடுபடுவது மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இளவரசி கேட் மிடில்டன் மற்றும் அவரது கணவரான இளவரசர் வில்லியம்ஸ் உள்நாட்டு விழாக்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கமாக இருந்து வருகிறது.
அரச முறை பயணமாக இருந்தாலும் கூட, இவர்களின் பயணங்கள் அது தொடர்பான தகவல்களை கணக்கிட்டு மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு செல்வார்கள்.
இந்நிலையில், கேட் மிடில்டனும், வில்லியம்சும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது மகாராணிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவில் வெளியாகும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் காலங்களில் கேட் மிடில்டன் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை வில்லியம்ஸ் தவிர்க்க வேண்டும் என மகாராணி எதிர்ப்பார்ப்பதாக தெரிகிறது.
இன்னும் சில வாரங்களில் மால்தா நாட்டு அரசு விழாவில் கேட் மிடில்டன் பங்கேற்பது தான் அவரது கடைசியான வெளிநாட்டு பயணமாக இருக்கும்.
வெளிநாடுகளுக்கு செல்வதை விட, அரண்மனையில் இருந்துகொண்டு நிர்வாக பணிகளை கவனித்து தன்னை எப்போதும் போல சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வார் என மகாராணி எதிர்ப்பார்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரண்மனை தகவல்கள் இவ்வாறு இருக்க, கேட் மிடில்டனின் தீவிர ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள், கேட் மிடில்டன் வெளிநாட்டு பயணங்களில் பங்கேற்காவிட்டாலும் கூட, உள்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நிச்சயமாக பங்கேற்பார் என்றும் அதுவே தங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
சமீபகாலமாக மகாராணியின் உத்தரவுகளுக்கு இளவரசி கேட் மிடில்டன் மதிப்பளிப்பதில்லை என அவர் மீது புகார் உள்ள நிலையில், தற்போது அவரது வெளிநாட்டு பயணங்களையும் மகாராணி ரத்து செய்ய போவதாக வெளியாகியுள்ள செய்திகள் அரண்மனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.