சந்திரிக்கா குமாரதுங்க எம்மை நாய் சேனா என்று கூறியுள்ளார் - ஞானசாரர் ஆவேசம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்குலக சக்திகளுடன் இணைந்து தம்மை அழிக்க முயற்சிப்பதாக பொதுபல சேனா அமைப்பி...

download (3)





முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்குலக சக்திகளுடன் இணைந்து தம்மை அழிக்க முயற்சிப்பதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


சந்திரிக்கா பண்டாரநாயக்க எம்மை நாய் சேனா என்கிறார். எம்மில் சிலரையே அவர் அப்படி கூறுகிறார். ஞானசார தேரர்  மேலும் தெரிவிக்கையில்,


இந்த அம்மையார் ஓய்வுபெற வேண்டியவர். அவர் மேற்குலக சக்திகளுடன் இணைந்து அவரது விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றி வருவதுடன் எம்மை இல்லாமல் செய்ய முயற்சித்து வருகிறார்.


முஸ்லிம்கள் சிலருக்கு முன்னால் சுதந்திர தினத்தை அனுஷ்டித்து விட்டு சூரா பேரவைக்கு சென்று விரிவுரையாற்றிய  எம்மை நாய் சேனா என்று கூறியுள்ளார்.


முஸ்லிம் அமைப்பொன்றின் விரிவுரையில் அவர் இதனை தெரிவித்திருப்பது என்பது இவருக்கு சிறுபான்மை மேனியா இருப்பதை காட்டுகிறது. பெரும்பான்மை பற்றி அம்மையாரிடம் எந்த கதையும் இல்லை.


பௌத்தர்களுக்கு ஏற்படும் அநீதிகள் தொடர்பில் இவர்களுக்கு எந்த அக்கறையுமில்லை. நாட்டில் வெற்றி பெற்றிருப்பது மைத்திரிபால சிறிசேன அல்ல. நாட்டுக்கு எதிராக வேலை செய்தவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.


இது பிரபாகரனை விடுதலை போராளி என உலகத்திற்கு கூறியவர்கள் வெற்றி. இதனால், இவர்கள் தற்போது நிம்மதியாக நித்திரை கொள்வார்கள் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.


Related

இலங்கை 4979660922387371141

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item