தீவை விலைக்கு வாங்கிய மகிந்த! அரசு கிடுக்குப்பிடி!
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, சீசெல்ஸ் தீவுகளில் தீவு ஒன்றை வாங்கியது தொடர்பாக அந்நாட்டு அரசு சிறப்பு விசாரணை நடத்தி வருகிறது. அத்துடன் ...


இலங்கை அரசு, இது சம்பந்தமான விடுத்த வேண்டுகோளுக்கு சீசெல்ஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் ஜின் போல் எடம் சாமான பதிலை அளித்துள்ளார்.
இரண்டு நாடுகளும் கையெழுத்திட்டுள்ள வரி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கு அமைய இந்த சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளியிட முடியும் எனவும் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீசெல்ஸ் நாட்டில் இலங்கை செய்துள்ள அனைத்து முதலீடுகள் பற்றியும் வேண்டுகோள்களுக்கு அமைய உதவி வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதிபராக இருந்த போது ராஜபக்சே, சீசெல்ஸ் நாட்டில் இலங்கை வங்கி ஒன்றின் கிளையை நிறுவியதுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளை ஆரம்பித்தார்.
அத்துடன் கடந்த ஆண்டு சீசெல்ஸ் நாட்டுக்கு ராஜபக்சே சென்றபோது, அங்கு இலங்கை தலைமை அலுவலகம் ஒன்றையும் திறந்து வைத்தார். சீசெல்ஸ் நாட்டில் சிறியளவில் இலங்கையர்கள் வசித்து வருகின்றனர்.