ஹொரனையில் காணாமல் போன சிறுமி இன்று சடலமாக மீட்பு
ஹொரனை அகுருவாதோட்டை வேரவத்த பிரதேசத்தில் நேற்று காணாமல் போயிருந்த சிறுமி இன்று சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் ஓட...


சிறுமியின் வீட்டுக்கு அருகாமையில் ஓடும் களு கங்கையில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மோப்ப நாய் இரண்டு மூன்று தடவைகள் இந்த இடத்தில் அங்கும் இங்கும் சென்றது. எனவே சிறுமி ஆற்றில் விழுந்திருப்பாரா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் மோப்ப நாய் வீதி வரை சென்றது. எனவே சிறுமியை யாராவது தூக்கிச் சென்றிருப்பார்களா என்று நாம் நினைத்தோம் என அங்கிருந்த உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் இமேஷா தெவ்மினி என்ற சிறுமியைத் தேடி பொலிஸார் தேடுதல் முன்னெடுத்தனர். இன்று காலை கடற்படையினரும் களு கங்கையில் தேடுதல் முன்னெடுத்தனர்.
அதன் பின்னர் காலை 10 மணியளவில் களுகங்கையில் இருந்து சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
ஹொரணை நீதவான் லோசனி வீரசிங்க நீதிவான் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பிரேத பரிசோதனைக்கான சடலம் ஹொரனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.