தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்...


தேர்தல் சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு செல்லும் கட்சிகளோ சுயேட்சை குழுக்களோ ஊர்வலம் மற்றும் நடைபவணிகளை முன்னெடுக்க முடியாது எனவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் கடந்த 6 ஆம் திகதி தொடக்கம் அடுத்த மாதம் 24 ஆம் திகதிவரை இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட முடியாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவிக்கின்றார்.