சிங்கள நடிகர் கொலை: இருவர் கைது
நடிகர் இந்திக்க ரட்னாயக்கவின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவர் பதுளை சுற்றுலா விடுதி யொன்றிலிருந்து பதுளை பொலிசார் கைது செய்துள்ளனர். ...


நடிகர் இந்திக்க ரட்னாயக்கவின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவர் பதுளை சுற்றுலா விடுதி யொன்றிலிருந்து பதுளை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இரவு களியாட்ட விடுதிகளில் நடனமாடும் 25 வயது நிரம்பிய கண்டியைச் சேர்ந்த இரேசா திலினி அமரசேக்கர என்ற இளம் பெண்ணும் பதுளைப் பகுதியின் உடுவரை என்ற இடத்தைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய நலின சம்பத் என்ற நபருமே கைது செய்யப்பட்டிருப்பவர்களாவர்.
இந்திக்க ரட்னாயக்க என்ற நாடகர் நடிகர் மகரகம உல்லாச விடுதியொன்றில் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டிருந்தார்.இது தொடர்பாக இருவர் தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்குட்
படுத்தப்பட்டபோது இரேசா திலினி அமரசேக்கர என்ற இளம் பெண் கொழும்பு களியாட்ட விடுதியில் நடனமாடுபவரென்றும் கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு குற்றச் செயல்களின் பிரகாரம் 12 பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டு பொலிசாரால் தேடப்பட்டு வந்தவரென்றும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
பதுளைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற அனாமதேய தகவலடிப்படையில் மேற்படி சுற்றுலா விடுதியை பதுளைப் பொலிஸார் சுற்றிவளைத்து குறிப்பிட்ட இருவரையும் கைது செய்துள்ளனர்.