வாழ்வா சாவா நிலையில் மஹிந்த! அதிரடியான முடிவில் மைத்திரி
நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பெரும் நெருக்கடி ந...


நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்ப்பாக மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்கும் தீர்மானத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீள திரும்ப பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவின் வேட்புமனு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் தமது அதிருப்பதியை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஜனாதிபதியை நேற்று சந்தித்த மாதுளுவாவே சோபித தேரர் தனது அதிருப்தியை வெளியிட்டார். இந்த சந்திப்பின் போது மஹிந்தவுக்கான வேட்புமனு இன்னும் வழங்கப்படவில்லை. நேற்று வெளியான செய்தியில் உண்மையில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அதன் பொதுச் செயலாளர் சுசில் பிறேமஜயந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வேட்புமனு குழப்பம் தொடர்பில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் மறுப்பு வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கூட்டணியில் வேட்பு மனு வழங்க தீர்மானித்துள்ளதாக வெளியான அறிக்கையில் ஜனாதிபதி கையொப்பமிடவில்லை எனவும் அதில் கையொப்பமிட்டது சுசில் பிரேமஜயந்த மாத்திரம் எனவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறான தீர்மானத்திற்கு சிறிலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் உண்மை வெளியாகும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு வழங்கப்பட்டதாக வெளியான செய்தியை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உதவி ஊடகப்பணிப்பாளர் பதவி விலகினார். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால வழங்கிய உறுதிமொழியை அடுத்து அவர் தமது பதவி விலகலை திரும்ப பெற்றுக்கொண்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புமனு வழங்கிய தீர்மானத்தை மீள பெற்றுக்கொள்ளப்படவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.