சுதந்திரக் கட்சியின் 05 முக்கியஸ்தர்கள் ஐதேகவுடன் பேச்சுவார்த்தை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுவது குறித...


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி. நாவீன்ன, சாந்த பண்டார, செஹான் சேமசிங்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன மற்றும் அருந்திக்க பெர்னாண்டோ ஆகியோர் இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுவது குறித்து கட்சியின் சில முக்கிய உறுப்பினர்களுடன் இவர்கள் ஐவரும் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இந்த ஐந்து உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள எடுக்கும் முயற்சிக்கும் மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கியதற்கும் இடையில் தொடர்பு கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பு மனுக்களில் மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related

இலங்கை 1797279928441070121

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item