UNP – ACMC முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவு
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது. கட்சித் தலைவர் றிச...
http://kandyskynews.blogspot.com/2015/07/unp-acmc.html

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளது.
கட்சித் தலைவர் றிசாத் பதியுதீன், அமீர் அலி, ஹமீட் ஆகியோர் ரணில், மலிக் ஆகியோர் அடங்கிய ஐக்கிய தேசியக் கட்சி உயர்பீடத்துடன் முக்கி பேச்சுக்கக்கள் நடைபெற்றுள்ளது.
இதன்போது முஸ்லிம் விவகாரங்கள் ஆசனப் பங்கீடு, வேட்பாளர் ஒதுக்கீடு, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், கண்டியில் ஆண்கள் முஸ்லிம் பாடசாலை, மலையக முஸ்லிம்களுக்கு நடைபெறும் பாரபட்சம், கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நீண்டநாட் கோரிக்கைகள், தமிழ் அரசியல் கைதிழகள் விவகாரம், கொலன்னாவையில் முஸ்லிம் பாடசாலை உள்ளிட்ட பல விடங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.
இந்த கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு நன்கு செவிமடுத்துள்ளது. மீண்டும் மிகவிரைவில் ரணில் தலைமையிலான குழுவை அகில மக்கள் காங்கிரஸ் சந்திக்கும். இதன்போது முன்வைத்த கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக்கொள்ளுமிடத்து புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவும் தீர்மானிக்கபட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate