நீண்ட இடைவெளிக்கு பிறகு சல்மான் ருஷ்டியின் புதிய நாவல் செப்டம்பரில் வெளியாகிறது
லண்டன்: இங்கிலாந்தில் வசித்து வரும் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார். வரலாறு, ...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_373.html
லண்டன்: இங்கிலாந்தில் வசித்து வரும் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார். வரலாறு, மாயாஜாலம், காதல் உட்பட பல்வேறு சுவைகளுடன் கூடிய அந்த புத்தகம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் பிரபல எழுத்தாளர் 62 வயதான சல்மான் ருஷ்டி இதுவரை கிரீமஸ், ஷேம், த மூர்ஸ் லாஸ்ட் சிக் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது மிட்நைட் சில்ட்ரன் என்ற நாவல் 1981-ம் ஆண்டு புக்கர் விருது பெற்றது. கடந்த 2008-ம் ஆண்டு சல்மான் ருஷ்டி, த என்சான்ட்ரஸ் ஆப் பிளாரன்ஸ் என்ற நாவலை வெளியிட்டார். அந்த நாவல் மக்களிடையே பிரபலமாக பேசப்பட்டது.கடந்த 2012-ம் ஆண்டு சல்மான் ருஷ்டியின் வாழ்க்கையில் நிகழ்ந்த மறக்க முடியாத சம்பவங்களை ஜோசப் ஆன்டன் என்பவர் தொகுத்து நூலாக வெளியிட்டார்.
சல்மான் ருஷ்டி கடந்த 1988-ம் ஆண்டு எழுதிய சாத்தானின் வேதங்கள் என்ற நூல் இஸ்லாமியர்களை அதிகளவில் புண்படுத்தியதாக கூறப்பட்டது. கடந்த 2007-ம் ஆண்டு சிறந்த நாவலாசிரியர் என்ற முறையில் சல்மான் ருஷ்டி இங்கிலாந்து ராணியின் சிறப்பு விருதைப் பெற்றார். இந்நிலையில், சல்மான் ருஷ்டி 7 ஆண்டுகளுக்கு பிறகு எழுதிய 2 வருடங்கள், 8 மாதங்கள், 28 இரவுகள் என்ற நாவல் 250 பக்கங்களில் வெளியாகிறது. இந்நாவலில் வரலாறு, மாயாஜாலம், காலம் கடந்து நிற்கும் காதல் அனுபவங்கள் அனைத்தும் அடங்கியிருக்கும்.
பகுத்தறிந்து காணும் திறன் இல்லாமல் இருளில் மூழ்கியிருக்கும் உலக மக்களுக்கு புதிய ஒளியை பாய்ச்சும் விதத்தில் இந்த நாவல் அமைந்திருக்கும்.சல்மான் ருஷ்டியின் புதிய நாவல் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகிறது என்று இங்கிலாந்து புத்தக வெளியீட்டு நிறுவனமான ராண்டம் ஹவுஸ் நேற்று லண்டனில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தது.


Sri Lanka Rupee Exchange Rate