முதன் முறையாக ஜப்பானில் இடம்பெற்ற ரோபோ திருமணம் (VIDEO)
தற்போதைய உலகில் ரோபோக்கள் (எந்திர மனிதர்கள்) பல்வேறு சாதனை படைத்து வருகின்றன. அவற்றுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி ஜப்பான் தலைநக...


தற்போதைய உலகில் ரோபோக்கள் (எந்திர மனிதர்கள்) பல்வேறு சாதனை
படைத்து வருகின்றன. அவற்றுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்தது.
இந்த திருமணம் ‘புரோயிஸ்’ என்ற ஆண் ரோபோவுக்கும், ‘யுகிரின்’ என்ற பெண் ரோபோவுக்கும் நடந்தது. இந்த ரோபோக்களை மய்வா டெங்கி என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
ஆண் ரோபோ புரோயிஸ் பெரிய அளவில் எந்திர மனிதன் உருவில் இருந்தது. ஆனால் பெண் ரோபோ யுகிரின் ‘யுகிகீஷிவாகி’ என்ற ஜப்பான் பொம்மை வடிவத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த பெண் ரோபோவுக்கு திருமண ஆடை அணிந்து மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
திருமண விழாவில் இரு தரப்பிலும் பல ரோபோக்கள் விருந்தினர்களாக பங்கேற்றன. திருமணம் முடிந்ததும் இரு ரோபோக்களும் ஒருவரை ஒருவர் முத்தமிட்டு கொண்டனர்.
பின்னர் ஜப்பான் முறைப்படி மணமக்களான ரோபோக்கள் ‘கேக்’ வெட்டின. அதை தொடர்ந்து ஆர்கெஸ்ட்ராவின் இசை நிகழ்ச்சி நடந்தது. இசைக்கேற்ப பொம்மைகளின் நடனமும் இடம்பெற்றது.
இதன் மூலம் உலகிலேயே முதன் முறையாக ரோபோக்களுக்கு திருமணம் நடந்த நிகழ்ச்சி ஜப்பானில் நடைபெற்றுள்ளது.