இஸ்ரேல் உலகிலேயே கொடூரமான அரசு- சவூதி
காசா மீது இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்பு தொடர்பில் சர்வதேச உண்மை கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையை சவூதி அரேபியா வரவேற்றுள்ளது. குறித்த அ...

http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_423.html

காசா மீது இஸ்ரேல் நடத்திய ஆக்கிரமிப்பு தொடர்பில் சர்வதேச உண்மை கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையை சவூதி அரேபியா வரவேற்றுள்ளது.
குறித்த அறிக்கைக்கு இஸ்ரேல் தரப்ப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காசா மீது இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, எதிர்கால சந்ததிகளையும் பாதிக்கும் அளவுக்கு பாரிய அழிவுகளையும், மனித அவலங்களையும் விட்டுச் சென்றுள்ளது என்று சர்வதேச உண்மை கண்டறியும் ஆணைக்குழுவின் தலைவர் மேரி மெக்காவனின் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் உலகிலேயே மிகவும் கொடூரமான இரத்தவெறி பிடித்த இனவாத அரசு என்பதை இது எடுத்துக் காட்டுகிறது என ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபைக்கான சவுதி நாட்டின் நிரந்தர பிரதிநிதி தூதுவர் ஃபைசல் துராத் இது தொடர்ப்பில் அங்கு உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.