மஹிந்தவுக்கு வேட்புரிமை இல்லை: சந்திரிக்கா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்க சுதந்திரக் கட்சியில் வேட்புரிமை வழங்கப்பட மாட்டாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித...


கம்பஹா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித திறனும் இல்லை.
எனவே சுதந்திரக் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படாது.
இவ்வாறான நிலைமையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சுதந்திரக் கட்சியில் வேட்புரிமை வழங்காமல் இருப்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி உட்பட குழுவினருக்கு வேட்புரிமை வழங்குவதற்கு இதுவரையில் தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலைமையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.