மஹிந்தவின் புதல்வர்கள் மேற்கொண்ட அக்கிரமங்கள்.. தமிழக விகடன் சஞ்சிகையில் வெளியாகியுள்ள கட்டுரை இது.

மஹிந்தவின் புதல்வர்கள் மேற்கொண்ட அக்கிரமங்கள் என்று தமிழகத்தின் விகடன் சஞ்சிகை ஒரு கட்டுரையை வெளியிட்டு உள்ளது. அக்கட்டுரை எவ்வித மாற்றமும் ...

rajapakse-sons-1மஹிந்தவின் புதல்வர்கள் மேற்கொண்ட அக்கிரமங்கள் என்று தமிழகத்தின் விகடன் சஞ்சிகை ஒரு கட்டுரையை வெளியிட்டு உள்ளது. அக்கட்டுரை எவ்வித மாற்றமும் இன்றி உங்கள் பார்வைக்கும்.

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது, அவருடைய மகன்கள் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புத்த மத அமைப்பு பரபரப்பு குற்றம்சாட்டிள்ளது.

இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே, அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர் கோத்தபய ராணுவ அமைச்சராகவும்,

மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாட்டு அமைச்சராகவும் பதவி வகித்தனர். ராஜபக்சே ஆட்சியில் இருந்தபோது இவர்களுடைய அதிகாரம் கொடி கட்டி பறந்தது.

இதேபோல் ராஜபக்சேயின் 3 மகன்களான நாமல், யோஷிதா, ரோகிதா ஆகியோரும் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, இவர்கள் மூவரும் ஏராளமான பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது.

இது குறித்து ஜாதிக ஹெல உறுமய என்னும் புத்தமத அமைப்பின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்கே கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராஜபக்சேயின் மூத்த மகன் நமல் ராஜபக்சே, தலைமையிலான நீலப்படை அணி நாட்டில் மாற்றுப்படையாக செயல்பட்டது. நீலப்படை அணியின் செயல்பாடுகள் தொடர்பாக அடுத்து வரும் வாரங்களில் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ராஜபக்சே மகன்களால் ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரம், துன்புறுத்துதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது தொடர்பாக பல்வேறு தகவல்கள் எங்களுக்கு கிடைத்து உள்ளன. இவர்களின் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான இளம் பெண்களுக்கு பல்வேறு அரசு பதவிகள் வழங்கப்பட்டு அவர்கள் சமாதானம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

ராஜபக்சேயின் மகன்கள் மீதான குற்றச்செயல்கள் குறித்து நாங்கள் பல தகவல்களை திரட்டி வரும் அதே நேரத்தில் இன்னும் கூடுதல் தகவல்களை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Related

அபிவிருத்திப் பணிகள் புதிய அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படும் -சிப்லி பாறூக்

 2015 ஜனாதிபதிதேர்தலின் பின் கடந்த அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்ட சகல அபிவிருத்திப் பணிகளும் ஜனாதிபதி மைத்திரி யுகத்தில் முன்னெடுக்கப்படும் என கிழக்கு மாகாண சபை உறுப்பிணரும்அகில இலங்கை மக்கள் காங்கி...

மகிந்தவை இரகசியமாக சந்தித்த முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர் யார்?

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மிகவும் இரகசியமான முறையில் கடந்த 12 ஆம் திகதி 6.00 மணிக்குப் பின்னர் சந்தித்த முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த சிரேஷ்ட துரோகி யார்?கடந்த 10 ஆம் திகதியான சனிக்கிழமை காலை ம...

‘தோல்வியிலும் இனவாதம் பேசுகிறார் முன்னாள் ஜனாதிபதி': NFGG

ஊடகப்பிரிவு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: ‘நடந்து முடிந்த ேர்தலில் மக்களின் தீர்ப்பானது, இனவாதத்தினைத் தோற்கடிக்கும் தீர்ப்பாகவே அமைந்திருக்கிறது. இருந்த போதிலும், மக்களால் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item