புனித மாதத்தில் ரத்த பூமியாக மாறிய சிரியா: 5,000 பேர் பலியான கொடூரம்
சிரியாவில் ரம்ஜான் மாதத்தில் மட்டும் 5,000 பேர் பலியாகியுள்ளதாக மனித உரிமை மீறல் தொடர்பாக கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது. பிரித்தானியா...


சிரியாவில் ரம்ஜான் மாதத்தில் மட்டும் 5,000 பேர் பலியாகியுள்ளதாக மனித உரிமை மீறல் தொடர்பாக கண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவை தலைமையமாக கொண்டு செயல்பட்டு வரும் எஸ்.ஓ.எச்.ஆர் (Syrian Observatory for Human Rights (SOHR) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிநாடு அமைக்க போராடிவரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுகும், சிரிய படையினருக்குமிடையே நடைபெற்ற தாக்குதல்களே இதற்கு காரணம் ஆகும்.
ரம்ஜான் மாதம் தொடங்கி முடிந்த ஒரு மாதத்திற்குள், 224 குழந்தைகள், 222 பெண்கள் உட்பட 220 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
மேலும், சிரியா படையினர் மேற்கொண்ட ராணுவ தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், இதில் குழந்தைகள் 100க்கும் மேற்பட்டோர் அடங்குவர்.
இது போல் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பினர் பலரை தலை கொய்து கொன்றுள்ளனர்.
இதுவரை 3 ஆயிரத்து 27 பேர் தலைகொய்து கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ் அமைப்பில் உள்ள குழந்தை போராளிகள் 52 பேர் அரசு படை தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் ரமலான் தினத்தன்று ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 120 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.