மொசூல் நகரில் ஒரு ஆடம்பர வணிக வளாகம்-ஐ.எஸ்
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள், ரம்ஜான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, தன்னுடைய ஆடம்பர, ‘ஷாப்பிங் மால்’ குறித்த புகைப்படங்களை, ஐ.எஸ்., ப...


உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் மக்கள், ரம்ஜான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, தன்னுடைய ஆடம்பர, ‘ஷாப்பிங் மால்’ குறித்த புகைப்படங்களை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இணையத்தில் வெளியிட்டனர்.மருத்துவமனை, ஐந்து நட்சத்திர ஓட்டலையடுத்து, ஈராக்கின், மொசூல் நகரில் ஒரு ஆடம்பர வணிக வளாகத்தை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் துவக்கியுள்ளனர். இந்த வளாகத்தில், மேற்கத்திய நாடுகளின் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கேக், சாக்லேட்டில் இருந்து, அனைத்து வகை பழங்கள் மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பது போன்ற புகைப்படங்கள்வெளியிடப்பட்டுள்ளன.இந்த புகைப்படங்களின் மூலம், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நகரவாசிகள், நிம்மதியாக வாழ்கின்றனர் என, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் காட்ட முயல்வதாக பிரிட்டனின், ‘தி சண்டே பீப்புள்ஸ்’ பத்திரிகை விமர்சித்துள்ளது.