ஷிராந்தி தொடர்பில் மஹிந்த, ரணிலுடன் தொலைபேசியில் பேசினாரா?

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்சவின் விசாரணை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில...

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்சவின் விசாரணை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டாரா? என்று ஜே.வி.பி கேள்வி எழுப்பியுள்ளது.
நிதிமோசடி தொடர்பில் ஷிராந்தி ராஜபக்சவை வாக்குமூலம் அளிக்க வருமாறு கடந்த வாரத்தில், நிதிமோசடி தடுப்புப்பிரிவு அழைப்பு விடுத்திருந்தது.
அவரும் அதனை ஏற்றுக்கொண்ட நிலையில், வாக்குமூலம் சபாநாயகரின் இல்லத்தில் வைத்து பெறப்பட்டது.
ஆர்ப்பாட்டம் நடத்தப்படலாம் என்ற காரணத்துக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரும் தெரிவித்திருந்தனர்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசியில் தொடர்புக்கொண்டு கேட்டுக்கொண்டமைக்கு அமைய ரணில் விக்ரமசிங்க தமது செல்வாக்கை நிதிமோசடி பிரிவிடம் பயன்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வைத்து கோரிக்கை விடுத்துள்ளார்.

Related

தலைப்பு செய்தி 7793757639896690155

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item