அபிவிருத்திப் பணிகள் புதிய அரசாங்கத்தில் முன்னெடுக்கப்படும் -சிப்லி பாறூக்
2015 ஜனாதிபதிதேர்தலின் பின் கடந்த அரசாங்கத்தினால் மேற் கொள்ளப்பட்ட சகல அபிவிருத்திப் பணிகளும் ஜனாதிபதி மைத்திரி யுகத்தில் முன்னெடுக்கப்படும...

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
சிப்லி பாறூக் மேலும் தெரிவிக்கையில் காத்தான்குடியின் அபிவிருத்திப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் சீரான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மைத்திரி ஆட்சிக்கு வந்தால் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் நின்று விடும் என்ற தேர்தல் பிரச்சாரம் முறியடிக்கப்பட்டுதற் போது காத்தான்குடி பிரதேசத்தில் வீதிகளுக்கு காப்பட் மற்றும் ஒழுங்கை களுக்குகற்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற் கட்டமாக காத்தான்குடி பிரதானவீதி சேர் ராஸிக் பரீட் மாவத்தை (குட்வின் சந்தி) யில் இருந்து நீர்த்தாங்கிவரை எஞ்சியருந்த வீதி காப்பட் இடப்படுகிறது..
மைத்திரியுகத்தில் சமத்துவம்,மத சுதந்திரம், ஊழல் அற்ற நிர்வாகம், மனித நேயம்,சகவாழ்வு பேணப்பட்டு சகல அபிவிருத்திப் பணிகளும் நடைபெறும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.