துருக்கியில் உள்ள அகதிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்த ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (வீடியோ இணைப்பு)
ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளுக்கான சிறப்பு தூதராக உள்ள ஏஞ்சலினா ஜோலி தன் மகளுடன் துருக்கியில் உள்ள சிரியா அகதிகள் முகாமிற்கு சென்று மக்க...


பிரபல ஹாலிவுட் நடிகையும் ஐக்கிய நாடுகள் சபையில் அகதிகளுக்கான சிறப்பு தூதராகவும் உள்ளவர் ஏஞ்சலினா ஜோலி.
இந்நிலையில் இவர் தனது 10-வயது மகளான ஷிலோ ஜூலியுடன் துருக்கியில் உள்ள சிரியா அகதிகள் முகாமிற்கு சென்றார். அங்குள்ள அகதிகளை சந்தித்த அவர் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் இது தொடர்பான கருத்தரங்கில் ஏஞ்சலினா பேசியதாவது, ”வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு போர் மற்றும் வன்முறையால் மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
பல நாடுகள் தங்கள் நாட்டுக்குள் அகதிகள் வருவதை தடுக்க முயற்சி எடுத்துவருகின்றன. இதனால் எங்கே செல்வது என்றே தெரியாமல் அகதிகள் தவித்துவருகின்றனர் என்று கூறியுள்ளார்.
பின்னர் அந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் மண்டின் பகுதியின் மேயர் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரம்படி துருக்கியில் மட்டும் 16 லட்சம் மக்கள் அகதிகளாக முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.