மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த வைத்தியரும், தாதியும் மீள அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு சேவையாற்றும் நோக்கில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த வைத்தியர் மற்றும் தாதி மீள அழைக்கப்பட்டுள்ளனர். ...


இந்த வைத்தியரும், தாதியும் இலங்கை இராணுவத்தில் கடமையாற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் மாலை 6.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு மீள அழைக்கப்பட்டுள்ளது.
வைத்தியரையும் தாதியையும் உடனடியாக இராணுவ வைத்தியசாலைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் முன்னிலையில் பிரசன்னமாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே மஹிந்தவிற்கு சேவையாற்றி வந்த ஒரு வைத்தியரும், தாதியும் முன்னொரு சந்தர்ப்பத்தில் மீள அழைக்கப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர் குறித்த வைத்தியரும் தாதியும் மட்டுமே முன்னாள் ஜனாதிபதிக்கு சேவையாற்றி வந்ததாகவும் தற்போது அவர்களும் மீள அழைக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.