சிறையிலிருந்து அரசியல்வாதிகள் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவது நியாயமற்றது!

குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்படும் அரசியல்வாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது ...

குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்படும் அரசியல்வாதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படுவது நியாயமற்றது என பிரதி அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.


இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ட்ரோல் எனத் தெரிவித்து சிறைச்சாலை வைத்தியசாலைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

ஆனால், சிறையில் அடைக்கப்படும் சாதாரண பொதுமக்களுக்கும் இதுபோன்ற நோய்கள் உள்ளன. இருப்பினும், அவர்களுக்கு இந்த அவகாசம் வழங்கப்படுவதில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது பொதுமக்களுக்குச் செய்யும் ஒரு அநியாயம் எனவும் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 4750636452589443313

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item